ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ் காஸ்மாஸ், விண்வெளி ஆராய்ச்சிக்காக மனித வடிவிலான ‘ரோபோ’ ஒன்றை தயாரித்து, பெடோர் என்று பெயரிட்டது.
விண்வெளி ஆராய்ச்சிக்காக மனித வடிவிலான பெடோர் என்று பெயரிடப்பட்ட ரோபோ கண்டு பிடிக்கப்பட்டு, சோயூஸ் எம்எஸ்-14 விண்கலம் மூலம் கஜகஸ்தானின் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 22ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, திட்டமிட்டபடி விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைய முடியாததால் சிக்கல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பாதுகாப்பான தொலைவில் விஞ்ஞானிகள் நிலைநிறுத்தினர். திங்கட்கிழமை காலை, சோயூஸ் எம்எஸ்-14 விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என, சர்வதேச விண்வெளி நிலையத்தின், தரை கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர், விளாடிமிர் சோலோவ் யோவ்
தெரிவித்தார்.
Discussion about this post