சர்வதேச எதிர்ப்புகளை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி இருப்பதை தென் கொரியா உறுதிபடுத்தியுள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சர்வதேச எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை அடிக்கடி நடத்தி வந்தார். இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, வடகொரிய அதிபர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் அணு ஆயுத பரிசோதனையை கைவிடுவதாக வடகொரியா அறிவித்தது. இந்நிலையில், மீண்டும் வடகொரியா அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு வருவதை தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக இதுபற்றி அந்நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் குறுகிய தொலைவு சென்று இலக்கை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை அனுப்பி பரிசோதனை செய்ததாக கூறியுள்ளது. இவற்றை ஏவும் வாகனத்தையும் வட கொரியா சோதித்து பார்த்து இருப்பதாக தென் கொரியா கூறியுள்ளது.
Discussion about this post