மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள விநாயகருக்கு 18படி பச்சரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது.
இந்தக் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 18 படி பச்சரிசியில் வெல்லம், கடலை, எள், தேங்காய், ஏலக்காய், நெய் கலந்து கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. இந்தக் கொழுக்கட்டையை மூங்கில் கூடையில் வைத்து மங்கல வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தூக்கி வந்தனர். முக்குறுணி விநாயகருக்கு இந்தக் கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்பட்டது.
Discussion about this post