கிருஷ்ணகிரி அருகே பறக்கும் கேமராக்களின் உதவிகளுடன் இரு காட்டு யானைகளை பிடிக்கும் பணிகள் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. இதில் மிகவும் ஆபத்தானது கொம்பன் எனும் யானை. அவற்றை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
இதற்காக, கதிரேப்பள்ளியில் இருந்து இரண்டு கும்கி யானைகள் தயார் படுத்தப்பட்டு, 4 பேர் கொண்ட மருத்துவக் குழு காட்டு யானையை துப்பாக்கி மூலமாக மயக்க ஊசி செலுத்திப்பிடிக்க முயற்சித்தது. காற்றின் காரணமாக மயக்க ஊசிகள் இலக்கை அடையாததாலும், மழையின் காரணமாகவும் முதல்நாள் பணி கைவிடப்பட்டது.
இந்தநிலையில் இரண்டாவது நாளாக யானைகள் செல்லும் பாதைகள் தடுக்கப்பட்டு, பறக்கும் கேமரா உதவியுடன் அவை தற்போது நிலைக்கொண்டுள்ள இடத்தை அறியும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Discussion about this post