ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவும் சூழலில் ராகுல்காந்தி தலைமையில் 11 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் டெல்லியில் இருந்து விமானத்தில் ஸ்ரீநகருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி அளித்து வந்த அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டதுடன், அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கெனவே காஷ்மீருக்குச் செல்ல முயன்ற அரசியல் தலைவர்கள் பலர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
Discussion about this post