தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை காவிரி ஆற்றில் இறங்கித் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார்.
தஞ்சை வெண்ணலோடை கிராமத்தில் ஆற்றின் நடுவே தண்ணீர் செல்வதற்குத் தடையாக இருந்த மணல் திட்டுக்களை அகற்றித் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பார்வையிட்டார். இப்பணிகள் அனைத்துமே கண்காணிப்பு கேமராக்களில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும், 114 ஏரிகளைத் தூர்வாரும் பணிகள் 24 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
Discussion about this post