குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்துச் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தென்காசி, குற்றாலம், மேலகரம், செங்கோட்டை எனப் பல இடங்களில் நேற்றுக் கனமழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுப் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி என அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அனைத்து அருவிகளிலும், நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை முதலே சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
Discussion about this post