திருவண்ணாமலை மாவட்டத்தில் நடமாடும் நூலகத்தில் அதிகப் புத்தகங்களை வாங்கிப் படித்த மாணவர்கள் 56 பேருக்கு மாவட்ட சார்பு நீதிபதி கேடயங்கள் வழங்கிப் பாராட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேடியப்பன்மலையில் இயங்கி வரும் தனியார் அறக்கட்டளை சார்பில் நடமாடும் நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. இதனைச் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடமாடும் நூலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்திய அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட சார்பு நீதிபதி ராஜ்மோகன் கலந்துகொண்டு மாணவ மாணவிகள் 56 பேருக்குத் திருவள்ளுவர், பாரதியார், விவேகானந்தர் ஆகியோர் பெயரிலான விருதுகளை வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் உட்பட 97 பேருக்கு விருதுகள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார்.
Discussion about this post