தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா.
7 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காள தேசத்தில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் அணிகள் முன்னேறியது.
ஒரு அரையிறுதியில் மாலத்தீவு. நேபாளத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
2-வது பாதி நேரத்தில் இந்தியாவின் மன்வீர் சிங் 48-வது மற்றும் 69-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். சுமீத் பாஸ்சி 84-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் கடைசி நேரத்தில் 88-வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் ஹசன் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா – மாலத்தீவு இடையிலான இறுதிப் போட்டி செப்டம்பர் 15-ந்தேதி நடைபெற உள்ளது.
Discussion about this post