கடல் வழியாக கடத்த முயன்ற 294 கிலோ கஞ்சா பொட்டலங்களை வாகன சோதனையின் போது காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை சோதனையிட்ட போது காலி மதுபாட்டில்களுக்கு இடையே போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 294 கிலோ கஞ்சாவை பறிமுதல் அவர்கள் செய்தனர். கடல் வழியாக இவை வெளிநாடுகளுக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
Discussion about this post