இந்திய பங்கு சந்தை நிலவரம் தினமும் எற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் காலை நிலவரப்படி 36 ஆயிரத்து 943 புள்ளிகளாக குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 10 ஆயிரத்து 880 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்கா பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், 8 ஆயிரத்து 20 புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 203 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5 ஆயிரத்து 435 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.
ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 11 ஆயிரத்து 802 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 20 ஆயிரத்து 614 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. ஹாங்காங் மற்றும் சீன பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடங்கி உள்ள நிலையில், ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 26 ஆயிரத்து 40 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 875புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
Discussion about this post