99 வயதான போதும், நடனப் போட்டியில் பங்கேற்ற இரண்டாம் உலகப் போர் வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஸ்காட்லாண்டில் பிறந்த மெக்மானுஸ், இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்த வீரர் ஆவார். மின்வாரியத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 99 வயதான இவர், வரும் ஜனவரி 5ஆம் தேதி தனது 100வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல், Tango நடனத்தின் மீது கொண்ட காதலால், அதைக் கற்றுக்கொண்டதோடு, ஆண்டுதோறும் அர்ஜென்டீன தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடத்தப்படும் Tango சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று நடனமாடி வருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக, விமானமே ஏறாத அவருக்கு, 100வது ஆண்டு பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், அவரின் பிறந்தநாள் பரிசாக, மெக்மானுசின் கனவை நிறைவேற்ற, அவரது நண்பர்கள் அர்ஜென்டினாவுக்கு விமான பயணச்சீட்டு வழங்கியுள்ளனர். கனவுகளுக்கு வயது ஒருபோதும் தடையில்லை என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார், இந்த 99 வயது மெக்மானுஸ்.
Discussion about this post