குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் செம்மண் கலந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆர்வமுடன் குளித்து செல்கின்றனர்.
Discussion about this post