மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், நீண்ட நாட்களுக்கு பிறகு மஞ்சளாறு மற்றும் சண்முகநதி அணைக்கு நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து காரணமாக 57 அடி கொள்ளளவு கொண்ட மஞ்சளாறு அணையின் இன்றைய நீர்மட்டம் 35.10 அடியாகவும், நீர் இருப்பு 126.93 மில்லியன் கனஅடியாகவும், அணைக்கு நீர்வரத்து 13 கனஅடியாகவும் உள்ளது. அதேபோல், 52 அடி கொள்ளளவு கொண்ட சண்முகநதி அணையின் தற்போதைய நீர்மட்டம் 32.5 அடியாகவும், நீர் இருப்பு 27.45 மில்லியன் கனஅடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 4 கனஅடியாகவும் உள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post