நாமக்கலில் வரும் 24ம் தேதி சட்டக்கல்லூரி திறக்கப்பட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி நாமக்கலில் சட்டக் கல்லூரி அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மகளிர் அரசு கல்லூரியில் உள்ள வளாகத்தில் சட்டக்கல்லூரிக்கான தற்காலிக இடம் தயாராகி வருகிறது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை வரும் 24ம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைக்க உள்ளார்.
Discussion about this post