ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு மூத்த வழக்கறிஞர்கள் 18 பேர் ஆஜராகியும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ப.சிதம்பரத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது என வாதிட்டனர். மேலும் மாபெரும் பொருளாதார குற்றத்தை விசாரிக்க முடியாமல் சிபிஐ, அமலாக்கத்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், பொருளாதார குற்றங்கள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டது, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. விசாரணையின் போது ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை எனவும் முரண்பாடாக பதில் அளித்ததாகவும் சிபிஐ வழக்கறிஞர் குற்றச்சாட்டினார். இதையடுத்து ப.சிதம்பரத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் பல ஆவணங்கள் ஒத்துப்போவதாகவும், சிதம்பரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் பணிகள் வழக்கு விசாரணைக்கு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர்.
Discussion about this post