புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சட்டப்பேரவைச் செயலரிடம் எதிர்கட்சிகள் கடிதம் அளித்துள்ளன.
புதுச்சேரியில் பிரதான எதிர்கட்சிகளான அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைச் செயலர் வின்சென்ட் ராயிடம் மனு ஒன்றை கொடுத்தனர். மனுவில் சபாநாயகர் நடுநிலையாக செயல்படவில்லை என்றும், தொடர்ந்து காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Discussion about this post