இமாச்சல், பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் மழை, வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
இமாச்சல், உத்தரக்கண்ட் மாநிலங்களில் கடந்த சில நாட்களாகப் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் அமீர்ப்பூரில் வெள்ளத்தின் வேகத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாத கல்லூரிக் கட்டிடம் அடியோடு சாய்ந்து விழுந்தது. கனமழை காரணமாக நேற்று கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
Discussion about this post