காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு எதிராக பாகிஸ்தான் வன்முறையை தூண்டி வருவதாக, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன், பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். 30 நிமிடம் நீடித்த தொலைபேசி உரையாடலில், பாகிஸ்தான் தலைவர்கள் சிலர் இந்தியாவிற்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பேசி வருவது அமைதிக்கு உகந்தது அல்ல என்று மோடி கூறினார். இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வன்முறையை துண்டிவிடுவதாக மோடி, டிரம்ப்பிடம் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post