தமிழக அரசின் சீரிய முயற்சியின் காரணமாக சென்னையில் மழை நீர் சேகரிப்பு திட்டம் மூலம், ஜூன் மாதத்தை விட ஜூலை மாதம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி நடைபெற்ற போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, அனைத்து இல்லங்கள் மற்றும் நிறுவனங்களில் கட்டாயம் மழை நீர் சேகரிப்பு கட்டிடம் அமைக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். அவர் வழியில் ஆட்சியமைத்து வரும் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திட்டத்தை விரிவுபடுத்த சென்னையில் மண்டல வாரியாக அதிகாரிகளை நியமித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டார். வட கிழக்கு பருவ மழை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் மக்களிடையே ஏற்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சியில் சிறிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 12 புள்ளி 5லட்சம் கட்டிடங்கள் உள்ளன. இதில் சுமார் 1 புள்ளி 42 லட்சம் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு ஆய்வு முடிக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அப்படி அமைக்கப்பட்டதன் விளைவாக கடந்த ஜூன் மாதத்தை விட ஜூலை மாதம் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நிலத்தடி நீர் மட்டமானது உயர்ந்துள்ளது.
1. தேனாம்பேட்டையில் ஜூன் மாதம் 7.52 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் மட்டமானது ஜூலையில் 0.53மீட்டர் அதிகரித்து 6.99மீட்டராக உயர்ந்துள்ளது.
2. சோழிங்கநல்லூரில் 6.54மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம் 0.97மீட்டர் உயர்ந்து 5.48மீட்டராகவும்,
3. பெருங்குடியில், 8.35மீட்டராக இருந்த நீர்மட்டம் 1.16மீட்டர் உயர்ந்து 7.19மீட்டராக உள்ளது.
4. அடையாறில் 7.54 மீட்டராக இருந்த நீர்மட்டம் 7.23மீட்டராக உயர்ந்துள்ளது.
5. ஆலந்தூர் பகுதியில் 9.28மீட்டராக இருந்த நீர்மட்டம் 8.74மீட்டராக உள்ளது.
6. வளசரவாக்கத்தில் ஜூன் மாதத்தில் – 7.52மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம் ஜூலையில் – 6.98மீட்டராக உயர்ந்துள்ளது.
7. அண்ணா நகரில் 7.86மீட்டரக இருந்த நிலத்தடி நீர்மட்டம் 1.19மீட்டர் அதிகரித்து 6.67மீட்டராக உள்ளது.
8. 10.17மீட்டர் இருந்த அம்பத்தூர் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் ஒரு மாதத்தில் 9.68மீட்டராக உள்ளது.
9. திருவிக நகரில் 8.64மீட்டராக இருந்த நீர்மட்டம் 8.14மீட்டராக உள்ளது.
10. 8.09மீட்டராக இருந்த ராயபுர பகுதியின் நீர்மட்டம் 7.94மீட்டராக அதிகரித்துள்ளது.
11. தண்டையார்பேட்டையில், 8.12மீட்டர் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 7.91மீட்டராக உயர்ந்துள்ளது.
12. மாதவரத்தில் 7.37மீட்டரிலிருந்து 7.17மீட்டராக உயந்துள்ள நீர்மட்டம்
13. மணலியில் 5.90மீட்டரிலிருந்து 5.63மீட்டராக உயர்ந்துள்ளது.
14. திருவொற்றியூரில் 5.38மீட்டராக உள்ள நீர்மட்டம் 0.34 மீட்டர் அதிகரித்து 5.04மீட்டராக அதிகரித்துள்ளது.
மழை நீர் சேகரிப்பு முறையாக பராமரிக்கப்படும் வீடுகளில் பச்சை நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. மேலும் மழை நீர் சேகரிப்பை சிறப்பாக பயன்படுத்தும் வீடுகளுக்கு சிறப்பு பரிசுகளை சென்னை மாநகராட்சி வழங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post