ரயில் போக்குவரத்தில் சிக்னல் கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க ஐரோப்பிய நாட்டின் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
இந்திய ரயில்வே போக்குவரத்தில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சிக்னல் கோளாறுகள் ஏற்படுவதால் ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்படுகிறது. இந்திய ரயில்வே இயக்கும் 10 ரயில்களில் 4 ரயில்கள் காலதாமதமாகச் செல்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ரயில்கள் தாமதமாவதற்கு முக்கியக் காரணம் சிக்னல் கோளாறு எனக் கூறப்படுகிறது. மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களில் அதிகளவில் சிக்னல் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவைகளில் 4 மணி நேரம் வரை பாதிபு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வகையில் ஐரோப்பிய நாட்டின் சிக்னல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்திய ரயில்வே செய்துள்ளது.
Discussion about this post