மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கத்துக்குத் தடை விதிக்கும் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நடைமுறைக்கு வந்துள்ளது. இருப்பினும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மும்முறை தலாக் கூறிப் பெண்களை விவாகரத்துச் செய்யும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.
உத்தரப் பிரதேசம் எட்டாவில் ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்துக்கு வந்த ஒருவர், நீதிமன்ற வாசலிலேயே மும்முறை தலாக் கூறித் தனது மனைவியை விவாகரத்துச் செய்துள்ளார். இது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் ஹாப்பூரிலும் வரதட்சணை கேட்டுக் கணவரின் குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்தியதாகவும், முத்தலாக் கூறித் தனது கணவர் தன்னை விவாகரத்து செய்ததாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அந்தப் பெண்ணின் கணவர் உள்ளிட்ட 4பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Discussion about this post