இமாச்சலப் பிரதேசம், உத்தரக்கண்ட் மாநிலங்களில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பியாஸ் ஆற்றில் கரைபுரண்டு பாயும் வெள்ளத்தால் குலு – மணாலி சாலையில் 70 மீட்டர் நீளத்துக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதே போல் மலைச்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததாலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் சிம்லா, குலு, மணாலி, மண்டி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரக்கண்ட் மாநிலங்களில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.
Discussion about this post