திருத்தணியில் உள்ள உணவகத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்த விமல் என்பவர், வாலிபால் போட்டி நடத்தி வந்துள்ளார். போட்டியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, லல்லு என்பவருக்கும் விமலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில், திருத்தணி நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராக வந்த விமலை பார்க்க வந்த மகேஷ் என்பவரை, மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளது.இந்த வழக்கில் தொடர்புடைய விமல்ராஜ், அஜீத்குமார், ராஜ்குமார், கோபிராஜ் உள்ளிட்ட 4 பேரும் திருவள்ளூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் சரண் அடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் விக்னேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 4 பேரும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். தலைமறைவாக இருந்து கொலை செய்ய திட்டம் தீட்டியதாக விசாரணையில் அவர்கள் தெரிவித்தனர். சரண்டைந்த 4 பேரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
Discussion about this post