திருப்பூரில், அரிசி கடையில் மேற்கூரையை உடைத்து, பெண் வேடமிட்டு நூதன முறையில், 27ஆயிரம் ரூபாய் பணத்தையும், நான்கு பென் டிரைவர்களையும் கொள்ளையடித்தவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
எம்.எஸ்.நகர் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இவர் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். காலையில் வந்து கடையை திறந்த போது மேற்கூரை உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்த போது கடையிலிருந்த 27 ஆயிரம் ரூபாய் பணமும், நான்கு பென் டிரைவர்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
ரமேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர் கடையிலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், பெண் வேடமிட்டு நூதன முறையில் மர்ம நபர் ஒருவர் திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் அந்த நபரை தேடி வருகின்றனர். இதேபோன்ற கொள்ளை சம்பவம், ஏற்கனவே மூன்று முறை நடைபெற்றதாக காவல் துறையினரிடம், ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Discussion about this post