மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் 10,000 கனஅடி நீர் மூலமாக அணை, சுரங்க நீர்தேக்க மின் நிலையங்களின் வாயிலாக 240 மெகாவாட் மின் உற்பத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் அணையில் உள்ள நீர்மின் நிலையத்தின் 4 அலகுகளில் தலா 12 புள்ளி 5 மெகாவாட் வீதம், 50 மெகாவாட்டுகளும், சுரங்க மின்நிலையத்தில் உள்ள 4 அலகுகளில் , தலா 50 மெகாவாட் வீதம் 200 மெகாவாட்களும், மின் உற்பத்தி செய்ய முடியும். நீர் தேக்க மின்நிலையங்களான, செக்கானூர், நெருஞ்சி பேட்டை உள்ளிட்ட ஏழு மின்நிலையங்களில் தலா 2 அலகுகள் வீதம் 14 அலகுகள் உள்ளன. இவற்றில் அலகுகளுக்கு 15 மெகாவாட் என 14 அலகுகளில் 210 மெகாவாட் மின் உற்பத்தி எடுக்கமுடியும். இந்நிலையில் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படு வருகிறது.
Discussion about this post