திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்து 415 ஏரிகளைக் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழைக்காலம் தொடங்குவதற்குள் அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் பணி குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 26 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆயிரத்து 415 சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊருணிகள் ஆகியவற்றைச் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆரணி அருகே உள்ள சேவூர் பெரிய ஏரியில், குடிமராமத்து திட்டப்பணியை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அவர் மக்களோடு மக்களாக இணைந்து கடப்பாரை கொண்டு பள்ளம் தோண்டி மண்ணை அள்ளி ஏரிக்கரையைப் பலப்படுத்தும் பணியைச் செய்தார்.
Discussion about this post