நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக மின்சாரம் அளிக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில், அரசின் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை விழா மற்றும் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, குமாரபாளையத்தில், இரண்டு கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாச்சியர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக மின்சாரம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
இதேபோல், ராசிபுரத்தில், தமிழக அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் குப்பைகளை அள்ளும் ஆட்டோ வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் தங்கமணி, மதுகடைகள் குறைக்கப்பட்டாலே மது ஆலைகளும் குறைந்துவிடும் என்று தெரிவித்தார். மேலும், பூரண மதுவிலக்கே அரசின் கொள்கை என்றும், தற்போது ஆயிரத்து 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post