பொது மக்களின் கோரிக்கையை ஏற்று வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்கு இரண்டு சொகுசு பேருந்துகளை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்கு தூங்கும் வசதியுடன் கூடிய அரசு விரைவு பேருந்தை, இரவு எட்டு முப்பது மணிக்கும், மற்றோரு பேருந்தை காலை எட்டு முப்பதுக்கு இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற அரசு, பேருந்து சேவையை தொடங்கியது. இதனை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர், தமிழக அரசு சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும், கிராமங்கள் தோறும் போக்குவரத்து செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Discussion about this post