தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயிலில் பயணச்சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இலவசப் பயணத்தை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைத்து வழித் தடங்களிலும் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும் வரை இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.
பாஸ் எடுத்துள்ள பயணிகள் மற்றும் மெட்ரோவில் வழக்கமாக செல்லும் பயணிகள் மத்தியில் இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. மெட்ரோ நிர்வாகத்தின் முடிவினால் தாங்கள் சிரமமின்றி பயணம் செய்ய முடிவதாக அவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post