இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி டாம் மூடி, மைக் ஹெசைன், லால்சண்ட் ராஜ்புத், ராபின் சிங், ஃபில் சிமன்ஸ் ஆகியோருடன் ரவி சாஸ்திரியும் மீண்டும் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில், கபில்தேவ் தலைமையிலான தேர்வு குழுவினர் கலந்து கொண்டு புதிய பயிற்சியாளாரை தேர்வு செய்தனர். அதன்படி ரவி சாஸ்திரியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டு வரை அவரே பயிற்சியாளராகவும் தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறமை, அறிவு மற்றும் அணியின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டே ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கபில்தேவ் கூறியுள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக தொடர விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post