திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஏரி, குளங்களை தூர்வாருவதற்காக நுண்ணிய கதிர்வீச்சு கருவிகள் மூலம் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது. குளங்களின் நீர்ப்பிடிப்பு, பரப்பளவை கணக்கிடுதல், கரையை பலப்படுத்துதல், கால்வாய்கள், மதகுகள், ஏரி மற்றும் பாசன கால்வாய்கள் சீர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக நவீன கதிர் வீச்சுக் கருவிகள் மூலம் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குடிமாரமத்து பணிகள் விரைவில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post