நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் மேற்கு திசை நோக்கி நாற்பது முதல் ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 சென்டி மீட்டர் மழையும், திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம், திருத்தணி, சோழவந்தான், அரக்கோணம் ஆகிய இடங்களில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரங்களில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post