கர்நாடகம் மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தற்போது நீர்வரத்து குறைந்து வருவதால் தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்ட நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடி என வினாடிக்கு மொத்தம் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக மீண்டும் குறைந்த நிலையில் தற்போது ஒகேனக்கல்லில் மீண்டும் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.மழை நீடிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
Discussion about this post