திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு பெய்த மழை இரவு முழுவதும் பரவலாக பெய்தது. திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், அரண்வாயல், ஈக்காடு, காக்களூர், பெரியகுப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து மழை பெய்து ஏரிகள், குளங்கள் நிரம்ப வேண்டும் என்றும், மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாக மழை நீடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டிக் கொண்டனர்.
Discussion about this post