தேனி மாவட்டம் கம்பம் சுருளியில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்தநிலையில், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த எட்டு நாட்களாக அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தற்போது, மழையின் அளவு குறைந்ததால் அருவிக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதால் கடை வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post