காலி செய்துவிட்ட வீட்டில் இருந்து 150 நகை கொள்ளை போய்விட்டதாக ஹோமியோபதி மருத்துவர் அளித்துள்ள புகாரால் காவல் துறையினர் குழப்பமடைந்துள்ளனர்
சென்னை வளசரவாக்கத்தையடுத்த லக்ஷ்மி நகர் பகுதியைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஒருவர், தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 150 சவரன் நகைகள் கொள்ளை போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த மருத்துவர் வீட்டை காலி செய்து சில மாதங்கள் ஆவதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். எனவே, உண்மையாகவே நகைகள் கொள்ளை போய்விட்டதா? அல்லது மருத்துவர் நாடகமாடுகிறாரா? என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Discussion about this post