உடல் உறுப்புக்கள் செயலிழந்து சரியான நேரத்தில் கிடைக்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடல் உறுப்பு தினமான இன்று உடல் உறுப்பு தேவை குறித்து விளக்கும் சிறப்பு தொகுப்பு..
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியாமான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட கூட நேரமில்லாமல் அலைந்து, நோய்வாய்ப்படும் இளைஞர்கள் ஒருபுறமிருக்க, மது, போதை பழக்கங்களுக்கு அடிமையாகி நோய்வாய்ப்படும் சிலரும் இருக்கின்றனர். இவர்களுக்கு முறையான மருத்துவம் கிடைக்காமல் நோய்வாய்ப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழக்கும் நிலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,நோய்வாய்பட்டவர்களின் உடல் உறுப்புகளில், எதாவது உறுப்புகள் செயலிழந்து விட்டால், மற்றொருவர் தானமாக அளிக்கும் உறுப்புகளை அவர்களுக்கு பொருத்தி நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்கி வருகின்றனர் மருத்துவர்கள்…
மூளைச்சாவு அல்லது விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழப்போரின் உடல் உறுப்புகள் 24 மணி நேரத்தில் தானம் செய்யப்பட வேண்டும் என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிக மிக அவசியமாகியுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவரது உடலில் கணையம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் ஏதேனும் நன்றாக இருந்தால் அவற்றை தேவையுள்ள நோய்வாய்ப்பட்டவர்களுக்கு பொருத்தி நோய்வாய்ப்பட்டவர்களை காப்பாற்றுவது வரபிரசதாமாக உள்ளது
தமிழகம் முழுவதும் உடல் உறுப்புக்கள் தேவைப்படுவோரை ஒருங்கிணைத்து, தானமாக பெறப்படும் உறுப்புக்களை தேவையானவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிப்பதற்காகவே TRANSTAN என்ற அமைப்பு ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவ மனையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இதுபோன்ற அமைப்புகள் இல்லை என்றும் தமிழகத்தை பார்த்து மற்ற மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கியிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தானத்தில் சிறந்த தானம் கண் தானம் என்பார்கள். இன்றைய மருத்துவத்துறை வளர்ச்சியில், உடலில் உள்ள எந்த உறுப்புக்களை தானாமாக அளித்தாலும், அதை தேவைபடுவோருக்கு சரியான முறையில் பொருத்தி அவைகளை மீண்டும் செயல்பட வைத்துவிடலாம். எனவே மண்ணில் புதைந்து அழுகி போகும் உடல் உறுப்புகளை நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அளித்து உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினத்தில் ஒவ்வொருவரும் தங்கள் உறுப்புக்களை தானம் செய்வோம் என்று சபதமேற்போம்…..
Discussion about this post