மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தொடர்ச்சியாக தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை நடைபெறும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
Discussion about this post