ராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட ஆணழகன் போட்டியில் வங்கி மேலாளர் வெற்றி பெற்றார்.அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில், 17வது மிஸ்டர் ராம்நாடு ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் 55, 60, 65, 70, 75 எடை பிரிவுகளில் தலா 10 பேர் கலந்து கொண்டு, 8 கட்டங்களாக தங்கள் உடல் கட்டமைப்பு திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 பேர் தேர்வு செய்யப்பட்டு முதல் மூன்றிடம் பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல ஆணழகன் உருவச் சிலை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
70 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற பாலமுருகன், மிஸ்டர் ராம்நாடு மாவட்ட ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஏர்வாடி, தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மிஸ்டர் வேர்ல்டு பட்டம் பெற்ற பாஸ்கரன் சாம்பியன் பட்டம் வழங்கி கவுரவித்தார்.
Discussion about this post