கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனால் அணைகளின் பாதுகாப்புக் கருதி, உபரி நீர் காவிரியாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர், தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் இருந்து, பிலிக்குண்டு செல்லும் சாலையில், காவிரிக் கரையோரம் உள்ள ஊட்டமலை, நாடார் கொட்டாய், ஆலம்பாடி ஆகிய ஊர்களில், குடியிருப்புப் பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒகேனக்கல்லில் இருந்து பிலிக்குண்டு, அஞ்செட்டி செல்லும் சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்வதற்குப் பெண்ணாகரம் வட்டாட்சியர் தடை விதித்துள்ளார். மேலும், நீர் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post