கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கர்நாடக அணைகளிலிருந்து மொத்தமாக 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 86 அடியை தாண்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் முழு கொள்ளளவை எட்டுவிடும் நிலையிலிருப்பதால், நாளை மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார்.
Discussion about this post