நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட நாயகி அம்மன் கோயில் உள்ளது. இங்கு 1982ம் ஆண்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், நடராஜர் சிலை உள்ளிட்ட நான்கு ஐம்பொன் சிலைகளை களவாடிச் சென்றனர். சிலைகள் திருட்டு வழக்கில் துப்பு கிடைக்காத நிலையில் விசாரணை கைவிடப்பட்டது. இந்த நிலையில், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, நாயகி அம்மன் கோயிலில் இருந்து திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பது கண்டுபிடித்துள்ளது. அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்தச் சிலையின் மதிப்பு 30 கோடி ரூபாய் ஆகும். இரண்டரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை உட்பட 8 சிலைகளையும் இந்தியா கொண்டு வர, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post