மழை, வெள்ள பாதிப்புகளை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் ஐந்து நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நொய்யல் ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. அப்பகுதி பழங்குடி கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களையும் அவர் வழங்கினார். வலையன் குட்டை பகுதியில் உள்ள தடுப்பணையை கடக்கும் தரைப்பாலம் சேதமடைந்ததை ஆய்வு செய்த அவர் உடனடியாக தரைப்பாலம் அமைத்துத் தர உத்தரவிட்டார்.
காளம்பாளையம் பகுதியில் வாய்க்கால் சேதமடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Discussion about this post