சென்னை பெரியமேடு பகுதியில் பெண்ணை கொலை செய்து விட்டு தப்பியோடிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் மின்விசிறியில் சடலமாக தொங்கி உள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இறந்து கிடந்த பெண், ரயில்வே துறையில் பணியாற்றிய மோகனா என்பது தெரிய வந்தது. கணவரை பிரிந்து வழும் மோகனாவிற்கு, கடலூரை சேர்ந்த வீராசாமி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் பெரியமேடு பகுதியிலுள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மோகனாவை வீராசாமி தனது வேட்டியால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, புடவையால் மின் விசிறியில் தொங்க விட்டுள்ளார். இதனையடுத்து, தப்பியோடிய வீராசாமியை கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post