பாகிஸ்தானில் நடைபெறும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இருந்து இந்திய அணி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆசியா ஓசியானியா குரூப் 1 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மகேஷ் பூபதி தலைமையிலான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ராம்குமார், ரோகன் போபண்ணா, திவிக் சரன் அடங்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். செப்டம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு சட்டப்பிரிவை இந்தியா நீக்கியது. இதனால் பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான உறவை துண்டிப்பதாக அறிவித்தது. இதனால், இந்திய டென்னிஸ் சம்மேளன, போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய கோரிக்கை வைத்தது. இதனை சர்வதேச டென்னிஸ் கவுன்சில் நிகாரகரித்ததை அடுத்து, பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.
Discussion about this post