கோவை கொடிசியாவில் பன்னாட்டு ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் மற்றும் ஜவுளி பொருட்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 9ந் தேதி தொடங்கிய இந்த கண்காட்சியில், பல்வேறு நாடுகளிலிருந்து ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்கள், உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 250 நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில் 320 அரங்குகள் அமைப்பட்டுள்ளன. தமிழகம் தவிர, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்களும், தங்கள் பொருட்களை கண்காட்சியில் வைத்துள்ளனர். இறக்குமதி பொருட்களுக்கு மாற்றாக, உள்நாட்டிலேயே குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் பொருட்களை ஊக்குவிப்பதே இந்த கண்காட்சியின் நோக்கம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post