நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பெரிய குளம் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் முலம் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விலைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் இந்த குளம் கடந்த 2 மாததிற்கும் மேலாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டன. தற்போது, கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், இதன் முலம் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விலைநிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு குளங்கள் பயன்பெறும் எனவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
Discussion about this post