ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கல்லாறு அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் பேருந்தில் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. பேருந்தில் பயணித்த மூன்று குழந்தைகள் 7 பெண்கள் உட்பட 17 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து அரக்கோணம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post