மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடையநல்லூர் கருப்பாநதி அணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணைக்கு, தற்போது நீர் வரத்து அதிகரிப்பால் 61
அடியாய் உயர்ந்துள்ளது . இன்னும், தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் நீர் வரத்து அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பாநதி அணை நீர் மட்டம் உயர்ந்துள்ளத்தால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் .
Discussion about this post